Sunday, July 21, 2013
Saturday, July 6, 2013
YOGA AHHHH :-)
யோகா
யோகா என்பது சுமார் 5000
ஆண்டுகளுக்கு முன்பே நம் பண்டைய இந்திய
உடல் சார்ந்த அறிவாக இருந்திருக்கிறது. "யோகா" என்ற வார்த்தை சமஸ்கிருத
வார்த்தையான "yuj" -லிருந்து வந்தது அதாவது "ஒன்று அல்லது ஒருங்கிணைந்த" என்று பொருள். யோகா பிறகு ஒரு நபரின்
சொந்த உணர்வு
மற்றும் உலகளாவிய
உணர்வாக மாறியுள்ளது.
யோகா பயிற்சில் நீங்கள் கவனம் செலுத்த கவனம் செலுத்த அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பிரசவத்திற்காக உங்கள் மனம் மற்றும் உடலை தயார் செய்ய இப்பயிற்சி உதவுகிறது. யோகா செய்வதினால் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டும்மல்லாமல் மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற பொதுவான கர்ப்ப நோய்களை குறைக்க முடியும். மேலும் இதன் மூலம் கருப்பை வாய் மற்றும் பிறப்பு உறுப்பு மென்மையாக திறப்பதன் மூலம் எளிதான சுகப்பிரசவத்தினை உறுதி செய்ய முடியும்.
சுவாச பயிற்சியின் நுட்பங்களினால் பிரசவத்தின்
போது வரும் பதற்றத்தினை எளிது படுத்த முடியும். மேலும் இது உங்கள்
உடல் வடிவம்,
கருப்பை, வயிறு,
இடுப்பு தளம்
மறுசீரமைப்பு மற்றும் பிரசவத்திற்குப் பிறகு ஏற்ப்படும்
மார்பக அசௌகரியத்திலிருந்தும் நிவாரணம் தர உதவுகிறது.
முன்னெச்சரிக்கை
- யோகாசனப் பயிற்சியின் போது நீங்கள் ஏதாவது அசௌகரியம் அல்லது சிரமத்திற்கு உள்ளாகிறீர்கள் என எண்ணினால், மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
அமைதியான
மற்றும் சந்தோஷமான
புதியவாழ்க்கையில் நுழையும் அனைத்து
தாய்மார்களுக்கும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
Tuesday, June 25, 2013
Garbharakshambigai Kavasam and songs for Safe Pregnancy and Delivery.
Kindly download this links
http://music.cooltoad.com/music/song.php?id=443124&PHPSESSID=obwukecnmlgv - By Sudha Ragunathan
Garbharakshambigai Kavasam - By Sudha Ragunathan
Song About Garbharakshambigai - By Sudha Ragunathan
Monday, June 24, 2013
Location of Garbharakshambigai Temple
கர்பரக்ஷாம்பிகை - இருப்பிடம்

கர்பரக்ஷாம்பிகை கோவில் இந்தியா-தமிழ்நாடு- தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர்
என்ற ஊரில்
அமைந்துள்ளது. இப்பிரபலமானக்கோவில் முல்லைவன நாதர் (சிவபெருமான்) கோவில்
என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது. அம்மன் கர்பரக்ஷாம்பிகை
(பார்வதி தேவி) பாதுகாப்பான கர்ப்பம், சுகப்பிரசவம்
மற்றும் குழந்தை பிறப்பிற்கு உதவி புரிகிறாள்
என்று நம்பப்படுகிறது. கர்ப்பிணியாக
காத்திருக்கும் பெண்களும் குழந்தை
வரம் வேண்டி
பிரார்த்தனை செய்ய இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இத்திருக்கோவில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
தங்கும் / உணவு வசதி
இத்திருக்கோவிலின் அருகில் சிறிய கடைகள் உள்ளன. அங்கு சாதாரண உணவு வகைகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. தங்கும் வசதி - கோவில் மற்றும் தனியார் சார்ந்த உறைவிடங்களாகவும் கிடைக்கின்றன.
For the Benefit of Visitors the Official site of Garbarakshambigai Temple : http://garbaratchambigaitemple.org/
Sunday, May 5, 2013
தாய்மை
பெண் என்பவள் அதிகம் விரும்பும் உயர் பதவி "தாய்மை". இதனை எடுத்துரைக்க வார்த்தைகள் போதாது. தாய்மையே பெண்மையை முழுமை படுத்துகிறது. பெண்ணே ஒரு உயிரை ஆக்கும் சக்திப் படைத்தவள். தாய்மை என்பது குழந்தை பெறுவது மட்டுமல்ல அது ஒரு புதிய சந்ததியை உருவாக்குவது. இக்காலக்கட்டத்தில் தாய்மை என்ற உணர்வே நவீனமாக்கப்பட்டுவிட்டது. கரு உருவாகுதல் முதல் குழந்தை பெருவது வரை இன்று நவீனமாகி விட்டது.
எல்லா குடும்பத்திலும் தென்றல் போன்ற சுகத்தை கொடுக்கும் முக்கிய உறுப்பினர்கள் குழந்தைகள். குழந்தைகள்தான் குடும்பம் என்ற அமைப்பினை தழைதோங்க செய்யும் துளிர். குழந்தை அது ஆணோ, பெண்ணோ ஒரு வீட்டில் வசந்தத்தை ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே ஏற்படும் வேண்டத்தகாத மனக்கசப்புகளை விரட்டியடிக்கும் மருந்துகளாக குழந்தைகள் செயல்படுகின்றன.
எல்லா குடும்பத்திலும் தென்றல் போன்ற சுகத்தை கொடுக்கும் முக்கிய உறுப்பினர்கள் குழந்தைகள். குழந்தைகள்தான் குடும்பம் என்ற அமைப்பினை தழைதோங்க செய்யும் துளிர். குழந்தை அது ஆணோ, பெண்ணோ ஒரு வீட்டில் வசந்தத்தை ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே ஏற்படும் வேண்டத்தகாத மனக்கசப்புகளை விரட்டியடிக்கும் மருந்துகளாக குழந்தைகள் செயல்படுகின்றன.
ஒரு செடி வளர துளிர்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு வீட்டில் குழந்தை வளர்வது. செடியில் துளிர்களே வேண்டாம் என்று துண்டித்து விட்டால் வளருமா? வளராது அதே போல்தான் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அதை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான கடமையாகி விடுகிறது. பொத்தி பொத்தி வளர்க்கப்பட வேண்டியவர்கள்தான் குழந்தைகள்.
Subscribe to:
Posts (Atom)