Sunday, May 5, 2013

தாய்மை

                                             
             பெண் என்பவள் அதிகம் விரும்பும் உயர் பதவி "தாய்மை". இதனை எடுத்துரைக்க வார்த்தைகள் போதாது. தாய்மையே பெண்மையை முழுமை படுத்துகிறது. பெண்ணே ஒரு உயிரை ஆக்கும் சக்திப் படைத்தவள். தாய்மை என்பது குழந்தை பெறுவது மட்டுமல்ல அது ஒரு புதிய சந்ததியை உருவாக்குவது.  இக்காலக்கட்டத்தில் தாய்மை என்ற உணர்வே நவீனமாக்கப்பட்டுவிட்டது. கரு உருவாகுதல் முதல் குழந்தை பெருவது வரை இன்று நவீனமாகி விட்டது. 


               எல்லா குடும்பத்திலும் தென்றல் போன்ற சுகத்தை கொடுக்கும் முக்கிய உறுப்பினர்கள் குழந்தைகள். குழந்தைகள்தான் குடும்பம் என்ற அமைப்பினை தழைதோங்க செய்யும்  துளிர். குழந்தை அது ஆணோ, பெண்ணோ ஒரு வீட்டில் வசந்தத்தை ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே ஏற்படும் வேண்டத்தகாத மனக்கசப்புகளை விரட்டியடிக்கும் மருந்துகளாக குழந்தைகள் செயல்படுகின்றன.

              ஒரு செடி வளர துளிர்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு  முக்கியம் ஒரு வீட்டில் குழந்தை வளர்வது. செடியில் துளிர்களே வேண்டாம் என்று துண்டித்து விட்டால் வளருமா? வளராது அதே போல்தான் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அதை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான கடமையாகி விடுகிறது. பொத்தி பொத்தி வளர்க்கப்பட வேண்டியவர்கள்தான் குழந்தைகள்.


2 comments:

  1. "ஆண் " இல்லையேல், தாய்மை எனும் வார்த்தைக்கே இடமில்லை. நல்ல வலைப்பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    http://www.classiblogger.blogspot.com

    ReplyDelete
  2. Good work Mrs. Subbulachumi...!!! Keep going :-)

    ReplyDelete